தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்த பெண்களின் தட்டில் பணம்! - திமுக வேட்பபாளர் காந்திராஜன்

திண்டுக்கல்: வேடசந்தூர் பகுதியில் திமுக வேட்பாளர் காந்திராஜன் பரப்புரை மேற்கொண்ட போது அவருக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் பட்டுவாடா செய்யும் காணொலி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

money
money

By

Published : Apr 2, 2021, 4:18 PM IST

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்துள்ள தொட்டணம்பட்டி, நல்லமனார்கோட்டை, அருப்பம்பட்டி பகுதிகளில் திமுக வேட்பாளர் காந்திராஜன் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவருக்கு அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அவ்வாறு ஆரத்தி எடுத்தவர்களின் தட்டுகளில் காந்திராஜனின் ஆதரவாளர்கள் ரூ.50 வழங்கிய வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

ஆரத்தி எடுத்த பெண்களின் தட்டில் பணம்

ABOUT THE AUTHOR

...view details