திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக இன்றைய இளைஞர்கள் வாகனத்தில் செல்லும்போது செல்போன் பேசிக்கொண்டு செல்வதாலும், தலைக்கவசம் அணியாமல் செல்வதாலும் ஏற்படும் விபத்துகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த குறும்படம் இயக்கப்பட்டு வருகிறது.
மீண்டும் காவல் உடையில் மாவட்ட காங்கிரஸ் தலைவர்...திண்டுக்கல்லில் சர்ச்சை - Dindigul Metropolitan District Congress Committee
திண்டுக்கல் காங்கிரஸ் மாவட்ட தலைவர் மணிகண்டன் ஏற்கனவே போலீஸ் உடை அணிந்து சர்ச்சையில் சிக்கிய நிலையில், மீண்டும் போலீஸ் உடையில் நகரில் வலம் வந்தது திண்டுக்கல் மாநகரில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
![மீண்டும் காவல் உடையில் மாவட்ட காங்கிரஸ் தலைவர்...திண்டுக்கல்லில் சர்ச்சை Etv Bharat](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-16244151-thumbnail-3x2-kang.jpg)
Etv Bharat
அக்குறும்படத்தில், திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரைமுருகன் போலீஸ் வேடத்திலும் நடித்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் காவல் துறை உடையில் திண்டுக்கல்லில் வலம் வந்ததாக சர்ச்சையில் சிக்கி, திண்டுக்கல் காவ்ல் துறையினரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் தற்போது மீண்டும் இக்குறும்படத்திற்காக போலீஸ் வேடத்தில் திண்டுக்கல் மாநகரில் வலம் வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:விருதுகளை அள்ளிய ஈடிவி பால் பாரத் தொலைக்காட்சி