தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 25, 2020, 5:50 PM IST

ETV Bharat / state

கரோனா பரிசோதனை மையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!

திண்டுக்கல்: மாவட்ட பேருந்து நிலையத்தில் தொடங்கப்பட்ட கரோனா பரிசோதனை மையத்தை மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி நேரில் ஆய்வு செய்தார்.

மாவட்ட ஆட்சியர் ஆய்வு
மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 12 ஆக அதிகரித்துள்ளது. இதில் 1, 450 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 531 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் திண்டுக்கல்லில் புதிதாக கரோனா பரிசோதனை மையம் மாவட்ட பேருந்து நிலையத்தில் இன்று (ஜூலை 25) முதல் செயல்பட தொடங்கியுள்ளது.
திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் அங்கு கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டும், நேர விரயத்தை தவிர்க்கும் பொருட்டும் மக்கள் சிரமமின்றி பரிசோதனை மேற்கொள்ளும் விதமாக பேருந்து நிலையத்தில் பரிசோதனை மையம் நிறுவப்பட்டுள்ளது.
இனி மக்கள் பேருந்து நிலையத்திலும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளலாம். இதனிடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள கரோனா பரிசோதனை மையத்தை மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மேலும் அங்கு பரிசோதனை செய்ய வந்தவர்களிடம் எதன் அடிப்படையில் பரிசோதனை செய்து கொள்ள வந்தீர்கள் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறி எதுவும் உள்ளதா எனவும் விசாரித்தார்.

ABOUT THE AUTHOR

...view details