கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக, இந்தியாவில் இதுவரை 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். இப்பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் மத்திய, மாநில அரசுகள் இணைந்து வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்த பல்வேறு வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இப்பணிகளில் அரசு மட்டுமின்றி, அனைத்துக் கட்சி உறுப்பினர்களும், தன்னார்வலர்களும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக சார்பில் முக்கிய நகர்ப் பகுதிகளில், வைரஸைக் கட்டுப்படுத்தக்கூடிய கிருமி நாசினி மருந்துகளை தெளித்து தூய்மைப்படுத்தி வருகின்றனர்.