தங்கம், வெள்ளி ஆபரணங்களின் விலைஉயர்வைப் போல வெங்காய விலை நாடு முழுவதும் பல்வேறு காரணங்களால் நாட்டு மக்களுக்கு விலை உயர்வு என்ற கொடுஞ்சுமையை தூக்கிக் கொடுத்திருக்கிறது. இன்றைய நிலவரப்படி, ஆந்திர மாநிலத்தில் அதிகபட்டசமாக நூறு கிலோ (ஒரு குவிண்டால்) வெங்காயம், 13 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.
இப்படி வெங்காயம் விண்ணைத் தொடும் உச்ச விலையை எட்டியிருக்க, பொதுமக்களை வாட்டி வதைப்பதோடு, விவசாயிகளின் நிலையையோ கேள்விக்குறியாக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வெங்காயம் திடீர் நோய்த் தாக்குதலால் பாழாகி வருகிறது. வெங்காயம் அழுகி விவசாயிகளை வேதனை அடையச் செய்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே குஜிலியம்பாறை உட்பட்டு தோப்புப்பட்டி என்ற பகுதியில் சுமார் 500 ஏக்கருக்கும் மேலாக வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக சுருள் நோய் மற்றும் கால் பிறப்பு என்ற நோய் தாக்கப்பட்டு அறுவடைக்கு 20 நாட்கள் இருக்கும் நிலையில் திடீரென அழுகி வீணாகி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.