தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதி, 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக களமிறங்கியுள்ள வேலுச்சாமிக்கு ஆதரவாக இன்று காலை நத்தம் அருகே முளையூரில் பரப்புரை தொடங்கப்பட்டது. அப்போது வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கக்கோரி முன்னாள் அமைச்சரும் சட்டப்பேரவை உறுப்பினருமான ஐ.பெரியசாமி வாக்கு சேகரித்தார்.