கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்குடன் கடந்த 25 ஆம் தேதியிலிருந்து 21 நாள்களுக்கு இந்தியா முழுவதும் 144 ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ளன. அதேபோல் பொதுமக்களின் அன்றாட அத்தியாவசிய பொருள்களான அரிசி, காய்கறி, பலசரக்கு, பால் வாங்குவதற்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி சார்பில் கைகளை சுத்தம் செய்யும் சானிடைசர் - மாநகராட்சி சார்பில் கைகளை சுத்தம் செய்யும் சானிடைசர்
திண்டுக்கல்: காய்கறி சந்தைக்கு வருபவர்களுக்கு கைகளை சுத்தம் செய்துகொள்ள மாநகராட்சி சார்பில் இலவச சானிடைசர் வழங்கப்படுகிறது. இச்செயல் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
இந்நிலையில் திண்டுக்கல் மாநகராட்சி சார்பாக தற்போது பொதுமக்கள் அதிகம் கூடுவதை குறைப்பதற்காக 4 இடங்களில் காய்கறி சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் கூட்டம் ஓரளவு குறைந்துள்ளது. இந்நிலையில் சந்தைகளுக்கு வரும் பொதுமக்கள் கரோனா தொற்று பரவாமல் இருக்க மாநகராட்சி சார்பாக கைகளை சுத்தம் செய்து கொள்ள ஒவ்வொருவருக்கும் சானிடைசர் வழங்கப்படுகின்றது. மேலும் இங்கு வரும் பொதுமக்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் நின்று காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.
அதேபோல் முகக் கவசம் அணியாமல் வரும் பொதுமக்களை காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் சந்தைக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிவருகின்றனர். பொது மக்கள் மட்டுமின்றி காய்கறிகள் விற்கும் கடைக்காரர்கள் ஒவ்வொருவரும் சுமார் பத்தடி தூரம் இடைவெளியில் கடை அமைத்து விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் இலவச சானிடைசர் வழங்கப்படும் செயல் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.