திண்டுக்கல் மாவட்டம் கோபாலசமுத்திர கரையில் அமையப்பெற்றது 108 விநாயகர் ஆலயம். இங்கு ஆசியாவிலேயே உயராமான 32 அடி உயர ஶ்ரீ மகா சங்கடஹர சதூர்த்தி விநாயகர் சிலை நிறுவப்பட்டு பக்தர்களால் வழிபாடு செய்யப்பட்டுவருகிறது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் வியட்நாம் மார்பிளால் வடிவமைக்கப்பட்ட 11 அடி உயர சிவன் சிலை இன்று காலை விநாயகர் ஆலயத்திற்கு வந்து சேர்ந்தது. பளிங்கு கல்லால் ஆன சிலை கிரேன் மூலம் கருவரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. முன்னதாக பீடம், சிலைக்கு சிறப்பு வழிபாடு, யாகம் நடைபெற்றது.
திண்டுக்கலில் 11 அடி உயர சிவன்! - சிவன் சிலை
திண்டுக்கல்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் தயாரான 11 அடி உயர சிவன் சிலை திண்டுக்கல் மாவட்டம் கோபாலசமுத்திர கரையில் உள்ள 108 விநாயகர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
11 அடி உயர சிவன்
இதைத் தொடர்ந்து, கருவறை, விமான வேலைகள் முடிந்ததும் விநாயகர் சதுர்த்தியன்று குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.