தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மது போதையில் தகராறு; ஒருவர் பலி, கொலையாளி கைது - குடிபோதை தகராறில் ஒருவர் பலி

திண்டுக்கல்: கொடைக்கானலில் முன்விரோதம் காரணமாக இரண்டு குடிமகன்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தப்பட்டு ஒருவர் உயிரிழந்த வழக்கை விசாரித்த போலீசார், கொலையாளியை கைது செய்தனர்.

கொலையாளி கைது

By

Published : Aug 17, 2019, 5:32 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அடுத்துள்ள தாண்டிக்குடியைச் சேர்ந்தவர்கள் செந்தில்குமார், சக்திவேல். இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்ததும், நேற்று இரவு இருவரும் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக்கொண்டனர்.

இதில் ஆத்திரமடைந்த சக்திவேல், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செந்தில்குமாரை வயிறு, நெஞ்சு உள்ளிட்ட பகுதிகளில் குத்தியுள்ளார். இதில் ஏற்பட்ட ஆழமான காயத்தினால் செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொடைக்கானலில் கொலையாளி கைது
இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய தாண்டிக்குடி காவல் துறையினர், ஒட்டன்சத்திரம் காவல் துறையினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் ஒட்டன்சத்திரம் வனத்துறை சோதனைச்சாவடி அருகே சத்திவேலை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் சக்திவேல் ஒட்டன்சத்திரம் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் ஒப்படைக்கபட்டு திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார்.

ABOUT THE AUTHOR

...view details