கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் தவிர்த்து அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக மதுபான கடைகள் தமிழ்நாடு முழுவதும் செயல்படுவதில்லை. இதனால், பல இடங்களில் மதுபானங்கள் திருடப்படுவது, சட்டவிரோதமாக மது விற்பனை அதிகரித்துவருகிறது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஏரிச்சாலை அருகே தனியார் மதுபான பார் ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ளது.
இச்சமயத்தைப் பயன்படுத்திய அடையாளம் தெரியாத கும்பல், பாரின் கண்ணாடியை உடைத்து பல லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை சாக்குப் பைகளில் போட்டு திருடிச் சென்றுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
ஊரடங்கில் பாரின் கண்ணாடியை உடைத்த கும்பல் இதற்கு முன்பு, திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மதுபான கடையிலிருந்த மதுபானம் திருடப்பட்டதைத் தொடர்ந்து அங்கிருந்த மதுபானங்கள் அனைத்தும் தனியார் மண்டபத்திற்கு மாற்றப்பட்டு காவல் துறை பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பட்டாகத்தியில் பிறந்தநாள் கேக் வெட்டிய இளைஞர் கைது