'மலைகளின் இளவரசி' என்றழைக்கப்படும் கொடைக்கானல் சுற்றுலா தலத்தற்கு, தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு வெளி மாநிலங்களிலிருந்து ஆண்டுதோறும் 8 முதல் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருவர். பள்ளிகள் விடுமுறை என்பதால் எப்போதும் ஏப்ரல்,மே மாதங்களில் மக்கள் அதிகளவில் வருவார்கள்.
குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் சீசனை நம்பித்தான் அப்பகுதி மக்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். மே மாதத்தில் 10 நாள்கள் நடைபெறும் கோடை விழாவில், சுற்றுலாத் துறை, தோட்டக் கலைத் துறை, கால்நடை பராமரிப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்பில் பாரம்பரிய நிகழ்ச்சிகள், நடனங்கள் நடைபெறும்.
பிரையண்ட் பூங்காவில் நடைபெறும் கண்காட்சியில் ரோஜா, டேலியா, பிங்க் ஆஸ்டர், சால்வியா உள்ளிட்ட 1000த்திற்கும் மேற்பட்ட வகையிலான பல லட்சம் பூக்கள் கண்ணை வியக்கும் வண்ணத்தில் அமைந்திருக்கும்.