திண்டுக்கல்லில் மாற்றுக் கட்சியில் இருந்து பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களைச் சந்தித்தார்.
பொருளாதார நெருக்கடிகள் விரைவில் சீரடையும் - பொன்.ராதாகிருஷ்ணன் - bjp members joining program
திண்டுக்கல்: நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி, தொழில் துறைகளில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை விரைவில் சீரடையும் என, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
பொன்.ராதாகிருஷ்ணன்
அப்போது அவர் பேசுகையில், காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது. சட்ட ரீதியிலான மாற்றங்களை அரசு முன்னெடுக்குபோது சில தடைகள் ஏற்படுவது வழக்கம். அவை விரைவில் சரிசெய்யப்படும். மேலும், நிலவி வரும் பொருளாதார நெருக்கடி, தொழில் துறைகளில் ஏற்பட்டுள்ள தேக்க நிலைகள் விரைவில் சீரடையும் என்றார்.
பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி