திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்தப் பகுதியில் மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு தனியார் நிறுவனங்கள் சார்பில் கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது. கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாத காலமாக மக்கள் வேலை இழந்து வருமானம் இன்றி தவித்து வரக்கூடிய நிலையில் தனியார் நிறுவனங்களுக்கு செலுத்தவேண்டிய கடன் தொகையை சுய உதவிக் குழு பெண்கள் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் தனியார் நிறுவனத்தில் இருந்து கடன் வசூல் செய்ய வரக்கூடிய நபர்கள், பெண்களை தகாத வார்த்தையால் பேசி பணம் கேட்டு மிரட்டுவதாகவும், உடனடியாக பணத்தை கட்டச் சொல்லி வற்புறுத்துவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.