தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆண், பெண் குணாதிசயங்களுடன் பிறந்த அதிசய கன்று.. காணக் குவியும் மக்கள் கூட்டம்!

திண்டுக்கல்லில், இடுப்புக்கு கீழ் நான்கு கால்கள், ஆண் பெண் கன்றுகளுக்கு உண்டான குணாதிசியங்களுடன் பிறந்த அதிசய கன்றுக் குட்டியை காண அக்கம் பக்க கிராம மக்கள் திரண்டனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

By

Published : Nov 27, 2022, 2:48 PM IST

திண்டுக்கல்: வேடசந்தூர் தாலுகா, சித்தூர் அடுத்த நல்லமநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த கேரளா பெருமாள் என்பவர் வீட்டில் தான் இந்த அதிசயக் கன்று பிறந்தது. தன் தோட்டத்தில் 3 பசு மாடுகளை கேரளா பெருமாள் வளர்த்து வருகிறார்.

இதில், ஒரு பசு மாடு கன்று ஈன்றது. புதிதாக பிறந்த கன்று குட்டிக்கு இடுப்பு பகுதிக்கு மேலே சாதாரண பசு தோற்றமும், இடுப்புக்கு கீழ் நான்கு கால்களுடன் காளை கன்றுக்கான உடல் அம்சமும், மறுபுறம் பசுங்கன்றுக்கான உடல் அமைப்பும் இணைந்து அதிசயத்தக்க வகையில் இருந்தது.

அதிசய கன்றுக் குட்டியை கண்டு வியப்படைந்த கேரளா பெருமாள் குடும்பத்தினர், ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். காட்டுத் தீ போல் தகவல் பரவிய நிலையில், அக்கம் பக்கத்து கிராமத்தை சேர்ந்த மக்கள் அதிசய கன்றுக் குட்டியை காணக் குவிந்தனர்.

ஆண், பெண் குணாதிசியங்களுடன் பிறந்த அதிசய கன்று

பொது மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த சில மணி நேரங்களில் கன்றுக் கட்டி பரிதாபமாக உயிரிழந்தது. அதிசயக் கன்று குறித்து தகவல் அறிந்து வந்த கால்நடை மருத்துவர்கள் அதை பரிசோதித்து பார்த்தனர். ஆண் மற்றும் பெண் கன்றுகளுக்கான உடல் அம்சங்களை ஒருசேர கலந்து பிறந்த அதிசய கன்று, சில மணி நேரங்களில் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:திமுக கொடியை பயன்படுத்தி வரைந்த உதயநிதி ஸ்டாலின் உருவப்படம்

ABOUT THE AUTHOR

...view details