திண்டுக்கல் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக உதவி இயக்குநராக முத்துகிருஷ்ணன் என்ற நபர் பணிபுரிந்துவருகிறார். இச்சூழலில் கரூரைச் சேர்ந்த நாட்ராயன் என்பவர் திண்டுக்கல் எரியோடு அருகே உள்ள தனக்குச் சொந்தமான நான்கு ஏக்கர் நிலத்தில் வீட்டுமனை பிரித்து விற்பனை செய்ய முடிவுசெய்துள்ளார்.
அதற்காக திண்டுக்கல் நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் உள்ள முத்துகிருஷ்ணனை அணுகியுள்ளார். அப்போது முத்துக்கிருஷ்ணன் ஒரு லட்ச ரூபாய் கையூட்டாக கேட்டுள்ளார்.