திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோபால்பட்டியில் சந்திரசேகருக்குச் சொந்தமான விஷ்ணு தேவி டெக்ஸ்டைல்ஸ், பாத்திரம், பர்னிச்சர் கடை உள்ளது. இரண்டு மாடிக் கட்டடத்தில் செயல்பட்டுவருகிறது.
இந்தக் கடையில் நேற்று இரவு ஒரு மணி அளவில் தீப்பற்றிப் புகை வெளிப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நத்தம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சி செய்யப்பட்டுவந்த நிலையில் கட்டுக்கடங்காத தீ மேலும் பரவத் தொடங்கியதை அடுத்து திண்டுக்கல் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு திண்டுக்கல் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.