திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகர்ப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் சுற்றுலா தொழிலை நம்பியும் கூலி வேலை செய்தும் வாழ்ந்து வருகின்றனர். ஆனந்தகிரி, அண்ணாநகர், இந்திரா நகர், சீனிவாசபுரம், அண்ணாசாலை, உக்கார்த்தே நகர் போன்றப் பகுதிகளில் பெரும்பாலனோர் வாடகை வீடுகளில் குடியிருந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக, வேலைவாய்ப்பு இன்றி அப்பகுதியினருக்கு வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது. தொடர்ந்து அவர்களிடம் வீட்டு வாடகை செலுத்தக்கூறி, வீட்டின் உரிமையாளர்கள் கட்டாயப்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளனர். வீட்டு உரிமையாளர்கள் அரசு அறிவித்துள்ள கால அவகாசத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோட்டாட்சியர் சிவக்குமாரிடம் அப்பகுதியினர் கோரிக்கை மனு அளித்தனர்.
வாடகைக் கேட்டு நச்சரிக்கும் வீட்டு உரிமையாளர்கள் மீது புகார்! - dindigul tenants reports
திண்டுக்கல்: கொடைக்கானலில் வாடகை செலுத்தக்கோரி, வீட்டு உரிமையாளர்கள் வற்புறுத்துவதாக கோட்டாட்சியரிடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
வாடகை கேட்டு நச்சரிக்கும் வீட்டு உரிமையாளர்கள் மீது புகார்
இதையும் படிங்க:வீட்டு வாசலில் தூங்கிய விவசாயிக்கு நேர்ந்த கொடூரம்!