திண்டுக்கல்:சாதனையாளர்கள் எப்போதும் சரித்திரம் படைக்க நினைப்பார்கள். அந்த வகையில் திண்டுக்கல் சின்னாளப்பட்டியில் உள்ள ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சிப் பெற்ற ஸ்கேட்டிங் மாணவர்கள் உலகச் சாதனைக்காக கர்நாடகா மாநிலம் செல்கின்றனர்.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெல்காமில் 81 மணி நேர ஸ்கேட்டிங் உலக சாகச நிகழ்ச்சி நடக்கிறது. இதில் 18 மாணவர்களும், 3 மாணவிகளும் பங்கேற்கின்றனர். இவர்கள் உலக சாதனை நிகழ்த்த உள்ளதை பலரும் வாழ்த்தி வரவேற்றனர்.
சாதனைப் படைக்கச் செல்லும் மாணவர்கள்
சின்னாளபட்டியில் நடந்த விழாவில் இவர்கள் அனைவரையும் வெற்றிபெற மாஸ்டர் பிரேம்நாத், உலக ஸ்கேட்டிங் ரோல் பால் தமிழ்நாடு சாம்பியன் விஜய வர்ஷினி, கண்மணி, ரோல்பால் ஸ்கேட்டிங் கேப்டன் தீபக் ராஜ், கோச் சக்திவேல் உள்பட பலர் வாழ்த்தினர்.