திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம்கோபால்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகன் லோகேஸ்வரன் (17). இவர் திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று (ஏப்.24) லோகேஸ்வரனும், அவரது நண்பர்கள் ஐந்து பேரும் நண்பனின் பிறந்தநாளை கொண்டாட திட்டமிட்டு, திண்டுக்கல் - கரூர் சாலையில் எல்.எஸ். நகர் பகுதியில் சுகுமாரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.
அதன் பின்னர், அனைவரும் அருகில் இருந்த கிணற்றில் குளித்துள்ளனர். இதில் அனைவரும் குளித்துவிட்டு கிணற்று கரைக்கு மேலே வர, லோகேஸ்வரன் மட்டும் கிணற்றை விட்டு வெளியே வரவில்லை. சக நண்பர்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் உதவி கேட்டுள்ளனர். பொதுமக்கள் தேடிப்பார்த்தும் லோகேஸ்வரன் கிடைக்காததால் காவல் துறைகக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.