விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலின் வாக்குப்பதிவு சூடுபிடித்து வருகிறது. இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கும் மாநிலங்களில் தற்போதுவரை தமிழ்நாட்டில் மட்டும் அதிகளவு வாக்குகள் பதிவாகியிருக்கிறது (31%).
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வாக்களிப்பு - அதிமுக
திண்டுக்கல்: வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது மனைவியுடன் வந்து வாக்கு செலுத்தினார்.
srinivasan
இந்நிலையில், திண்டுக்கல்லில் உள்ள எம்.வி.எம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தனது மனைவி நாகேஸ்வரி உடன் வருகை தந்து தனது வாக்கை பதிவு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ’புதுவை உட்பட அனைத்து தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளிலும் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்’ என்றார்.