திண்டுக்கல்: திண்டுக்கல் அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் திண்டுக்கல் நாகல் நகரில் நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், " பொங்கல் பரிசுத் தொகுப்பு ரூ 2500 வழங்குவதற்கு ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் யாரும் கோரிக்கை வைக்காத நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாமாக முன்வந்து வழங்கினார். ஆனால், அதற்கு மு.க. ஸ்டாலின் தடை உத்தரவு கேட்டு நீதிமன்றம் சென்றார்.
ஸ்டாலின் கையில் வேலை எடுத்துவிட்டார், இனி சூரசம்காரம்தான் என துரைமுருகன் பேசியுள்ளார். அதெல்லாம், ஒன்றும் நடக்காது. கடவுள் இல்லை எனக் கூறிவிட்டு ரம்ஜான் தொப்பி வைத்து நோன்பு துறப்பார்கள், கிறிஸ்தவ தேவலாயங்களுக்குச் சென்று கிறிஸ்துமஸ் கொண்டாடுவார்கள் ஆனால், இந்து கோயில்களுக்கு மட்டும் செல்வதில்லை. எனக்குப் பிடிக்காது என்று ஸ்டாலின் கூறுவார்
ஸ்டாலின் என்பது தமிழ் பெயரா? முதலில் ஸ்டாலின், தனது பெயரை தமிழில் மாற்றிவிட்டு மொழிப்போர் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தை நடத்தவேண்டும். முன்னாள் திமுக அமைச்சர்கள் 13 பேர் மீது வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதில், ஐ. பெரியசாமி, செந்தில்குமார் உள்ளிட்டவர்கள் குடும்பத்தினர் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் குற்றமற்றவர்கள் என திமுகவினர் வெளியில் வந்தால், நாங்களே அவர்களுக்கு மாலை அணிவிப்போம்.