திண்டுக்கல் மாவட்டம், ஜி.எஸ் நகரில் அம்மா பூங்கா, உடற்பயிற்சி கூடத்தை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,
'கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை..!' - திண்டுக்கல் சீனிவாசன் - திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல்: "அதிமுக கட்சிக்குள் எந்த குழப்பமும் கிடையாது" என்று, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
"ஆட்சியும் கட்சியும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதிமுக கட்சியினுள் எந்த ஒரு குழப்பமும் கிடையாது. கணவன் மனைவி உறவு போன்று செயல்பட்டு வரும் நிலையில் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று எதையாவது பேசி விட முடியாது. அதிமுக ஆட்சியும் கட்சியும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எந்த குழப்பமும் கட்சிக்குள்ளே கிடையாது.
தமிழ்நாடு அமைச்சர்கள் எல்லோரும் முழுமனதோடு சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ராஜன் செல்லப்பா யாரை சொல்கிறார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியுற்றாலும் சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளனர்" என தெரிவித்தார்.