திண்டுக்கல்:பழனியில் மாவட்ட காவல் துறை சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் கலந்துகொண்டார். அப்போது ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
பின்னர் அவ்வழியே ஹெல்மெட் அணிந்துவந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சீனிவாசன் இனிப்புகள் வழங்கினார்.