தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திண்டுக்கல் குத்துச்சண்டை வீரர்கள் சாதனை: எஸ்.பி. பாராட்டு - மாநில அளவிலான குத்துச் சண்டை போட்டி

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் கலந்துகொண்டு தங்கம், வெண்கலப் பதக்கங்களை வென்ற வீரர்களை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.

குத்துச்சண்டை வீரர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் பாராட்டியது தொடர்பான காணொலி
குத்துச்சண்டை வீரர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் பாராட்டியது தொடர்பான காணொலி

By

Published : Nov 23, 2021, 8:11 AM IST

திண்டுக்கல்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் திண்டுக்கல்லின் ஆறுமுகம் காசிராஜன் பயிற்சி மையத்தைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இதில் ஜூனியர் பிரிவில் தினேஷ், அஸ்வினி, சௌந்தர்யா ஆகியோர் தங்கம் வென்றனர்.

மேலும் மீனா சாலம் பிரிஜித், ஆகாஷ் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் வெற்றிபெற்ற வீரர்களைநேற்று (நவம்பர் 22) நேரில் அழைத்துப் பாராட்டினார்.

குத்துச்சண்டை வீரர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் பாராட்டியது தொடர்பான காணொலி

இது குறித்து வெற்றிபெற்ற வீரர்கள் பேசுகையில், “நாங்கள் மாநில அளவிலான போட்டியில், ஆறுமுகம் காசிராஜன் பயிற்சி மையத்திலிருந்து பங்கேற்றுச் சாதனை படைத்துள்ளோம். இதே போன்று தேசிய, உலக அளவில் நடக்கும் போட்டிகளிலும் பங்கேற்றுச் சாதனைகளைக் குவிக்கத் திட்டமிட்டுள்ளோம்” என்றனர்.

இதையும் படிங்க:வெள்ளத்தில் சிக்கிய பசுக்கள்: துரிதமாக மீட்பு

ABOUT THE AUTHOR

...view details