திண்டுக்கல்லில் 31ஆவது சாலை பாதுகாப்பு வார தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பேரணியை தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார். அதன்பின்னர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த நபர்களுக்கு பூ கொடுத்து ஹெல்மெட் அணிய வேண்டும் எனக் கூறி அனுப்பி வைத்தார்.
யானைகள் வரும் போகும்... - வனத்துறை அமைச்சர் அலட்சிய பதில் - மலைவாழ் மக்கள்
திண்டுக்கல்: வனப்பகுதியில் உள்ள கிராம மக்கள் யானை தொல்லையால் அவதிப்படுவது குறித்து கேட்டதற்கு, மலைகளில் இருந்து யானைகள் வரும், பின்னர் அதுவாகவே திரும்பிச் சென்றுவிடும் என வனத்துறை அமைச்சர் சீனிவாசன் அலட்சியமாக பதிலளித்துள்ளார்.
தொடர்ந்து தமிழ்நாடு வனப்பகுதிகளில் உள்ள கிராமங்களில் யானைகள் தொந்தரவு அதிகமாக உள்ளது என்ற செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மலைகளிலிருந்து யானை கீழே இறங்கும், மீண்டும் அதுவாக சென்றுவிடும் என அலட்சியமாக பதில் கூறினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து காவல் துறையினரின் துரித நடவடிக்கையால் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் மீதும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்ததன் காரணமாக மாவட்டத்தில் 19% விபத்து குறைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பியபோது, குடியுரிமை பிரச்னை முடிந்து பழைய கதையாகிவிட்டது என கூறினார்.