திண்டுக்கல் மாவட்டம் ரவுண்ட் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி(30). இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், நேற்று இரவு அனுமந்தநகரில் அடையாளம் தெரியாத நபர்களால் அவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து, திண்டுக்கல் நகர் வடக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
திண்டுக்கல்லில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை - rowdy murder
திண்டுக்கல்: முன்விரோதம் காரணமாக பிரபல ரவுடி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் ரவுடி கொலை
இதையடுத்து கார்த்தியின் சடலம் உடற்கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில் முன்பகை காரணமாக இந்தக் கொலை நடைபெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Last Updated : Apr 24, 2019, 7:09 PM IST