தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒட்டன்சத்திரத்தில் மாணவர்களுக்காக களமிறங்கிய பாஜக! - கழிப்பறை வசதியற்ற பள்ளிக்காக பாஜகவினர் சாலை மறியல்

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கழிப்பறை வசதி, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தரக்கோரி பாஜகவினர், பள்ளி மாணவர்களுடன் அரசுப் பேருந்தை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பாஜகவினர் சாலை மறியல்

By

Published : Sep 6, 2019, 8:52 AM IST

Updated : Sep 6, 2019, 9:37 AM IST

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள காவேரியம்மாபட்டியில் பல ஆண்டுகளாக அரசு உயர்நிலைப்பள்ளியில் குடிநீர் பற்றாக்குறை, தரமற்ற கழிப்பறை, இடிந்த சுற்றுச்சுவர் போன்ற பிரச்னைகளால் மாணவர்கள் அவதிப்பட்டுவருகின்றனர்.

இதனால் பாரதிய ஜனதா கட்சியினர் கிராம மக்களை ஒன்றிணைத்து பள்ளி மாணவர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கே சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் ஒட்டன்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன், சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி ஓரிரு தினங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து பாஜகவினர், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலைந்துசென்றனர்.

Last Updated : Sep 6, 2019, 9:37 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details