திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சென்னமநாயக்கம்பட்டியில் ஷிபா மருத்துவமனை செயல்பட்டுவருகிறது. இந்த மருத்துவமனையினை சலீமா என்ற மகப்பேறு மருத்துவர் நடத்திவருகிறார். இவரது மகன் பரூக். இவரும் அதே மருத்துவமனையில் மருத்துவராக உள்ளார்.
கடந்த 29ஆம் தேதி வெளி நோயாளிகள் சென்ற பிறகு மருத்துவமனையில் கேட்டை பூட்டிய ஊழியர்கள் உள்ளே இருந்துள்ளனர். அப்போது அவ்வழியாக பதிவெண் இல்லாத காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் காரின் மூலம் மருத்துவமனையின் வாசலில் உள்ள இரும்பு கேட்டை இடித்துத் தள்ளினர்.
இதில் கார் மோதிய வேகத்தில் இரும்புக் கேட்டுகள் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியது. இந்த நிலையில் அந்த நபர்கள் காரிலேயே தப்பிச் சென்றனர். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த தாடிக்கொம்பு காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
தனியார் மருத்துவமனை வாயில் கேட் இடிப்பு இதனிடையே இரவு வேளையில் மருத்துவமனை கேட் அருகே யாருமில்லாத காரணத்தினால் உயிர்ச்சேதம் எதுவும் நடைபெறவில்லை. தொடர்ந்து வாயில் கேட்டை உடைத்து தள்ளிய காரில் நம்பர் பிளேட் எதுவுமில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க...ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்றுவதில் வழக்கு - விஜயபாஸ்கர்