திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகபுரம் பகுதியில் ரகுபதி என்பவருக்குச் சொந்தமான மளிகைக் கடை உள்ளது. நேற்று (செப். 29) இரவு வழக்கம்போல் அவர் கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இன்று (செப். 30) காலை மீண்டும் ரகுபதி கடையைத் திறந்து பார்த்துள்ளார். அப்போது கடையின் மேற்கூரையைப் பிரித்து அடையாளம் தெரியாத நபர் கடையிலிருந்த எல்.இ.டி. டி.வி., கல்லா பெட்டியில் வைத்திருந்த ஆறாயிரம் ரூபாய், உண்டியல் பணம், மளிகைப் பொருள்கள் ஆகியவற்றைத் திருடிச்சென்றது தெரியவந்தது.