தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மணல் லாரி மோதி மூதாட்டி படுகாயம்... லாரிகளை சிறைப்பிடித்து போராட்டம்

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே மணல் லாரி மோதி மூதாட்டி ஒருவர் படுகாயம் அடைந்தார்.

dindigul people protest against sand lorries which caused an accident to an old woman
மணல் லாரி மோதி மூதாட்டி படுகாயம்; லாரிகளை சிறைப்பிடித்து போராட்டம்

By

Published : May 31, 2020, 2:30 PM IST

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ளது குடகணாறு நீர் தேக்கம். இங்கு தற்போது தண்ணீரின்றி வறண்டுபோய் உள்ளதால், அப்பகுதியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட லாரிகள் மூலமாக மண் அள்ளி வருகின்றனர்.

வேடசந்தூர் - கரூர் சாலையில் உள்ள விருதலைப்பட்டி கிராமம் வழியாக மணல் லாரிகள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி அப்பகுதியில் விபத்து ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி காளியம்மாள் என்ற மூதாட்டி, கடைக்கு வந்துவிட்டு திரும்பியபோது அதிவேகமாக மணலை ஏற்றிவந்த லாரி மோதியதில் மூதாட்டியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

மூதாட்டி மீது மணல் லாரி மோதி விபத்து ஏற்படுத்திய வாகனம் நிறுத்தாமல் சென்றதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென திரண்டு பத்துக்கும் மேற்பட்ட மணல் லாரிகளை சிறைபிடித்து இவ்வழியாக இனிமேல் மணல் வாகனங்கள் இயக்கக்கூடது என ஊராட்சி மன்ற தலைவர் முத்துவேல் உடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:10 அடி தூரம் பறந்து விழுந்த லாரி - சிசிடிவி காட்சிகள்

ABOUT THE AUTHOR

...view details