தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.4 கோடியை தொட்ட பழனி முருகன் கோயில் உண்டியல் வசூல்! - latest tamil news

பழனி முருகன் கோயிலில், பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் 3கோடியே 93 லட்சத்து 37 ஆயிரத்து 731 ரூபாய் ரொக்கமாக கிடைத்துள்ளது.

பழனி கோயில் உண்டியல்
பழனி கோயில் உண்டியல்

By

Published : Feb 3, 2023, 12:57 PM IST

பழனி கோயில் உண்டியல் எண்ணும் பணி

திண்டுக்கல்: முருகனின் அறுபடை வீடுகளில் 3ஆம் படைவீடான பழனி முருகன் கோயில் புகழ்பெற்றது. இந்த கோயிலின் ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2006ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை. பின்னர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்த நிலையில், சுமார் 17 ஆண்டுகளுக்கு பிரகு கடந்த ஜனவரி 27 ஆம் தேதி, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.

கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் மலைக்கோயிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் எண்ணும் பணி நேற்றும், இன்றும் நடைபெற்றது. இதில் 3 கோடியே 93 லட்சத்து 37 ஆயிரத்து 731 ரூபாய் ரொக்கமாகவும், தங்கம் 694 கிராமும், வெள்ளி 17,539 கிராமும், வெளிநாட்டு கரன்சி 692 நோட்டுகளும் கிடைத்துள்ளது.

உண்டியல் எண்ணும் பணியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், கோயில் அதிகாரிகள், வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர். உண்டியல் எணணும் பணியினை சிசிடிவி கேமரா மூலம் அறங்காவலர் குழுவினர் கண்காணித்தனர். கும்பாபிசேகம் முடிந்த நிலையில் பக்தர்கள், உண்டியிலில் செலுத்திய காணிக்கைகள் 4 கோடியை நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பழனி தண்டாயுதபாணி சுவாமி சிலையை கடத்த முயற்சி: ராம ரவிக்குமார் புகார்

ABOUT THE AUTHOR

...view details