திண்டுக்கல்: தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்று தீவிரமாக பரவுவதை அடுத்து நோய்த் தொற்றினை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அத்தியாவசிய தேவைகளுக்காக காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை மளிகை காய்கறி உள்ளிட்ட கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஏழு நாட்கள் எந்தவித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கில், மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருக்கவேண்டும் என இன்று (மே 22) அறிவித்தது. அதற்கான முன்னேற்பாடாக, 22, 23 ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.