தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊசி போட்டா பரிசு - நத்தம் பேரூராட்சியின் முயற்சி - தடுப்பூசி போட்டு கொள்பவர்களுக்கு சலுகை

கரோனா தடுப்பூசி போட்டுக் போட்டுக்கொள்ளும் பொதுமக்களுக்கு குலுக்கல் முறையில் ஆண்ட்ராய்டு கைபேசி உள்ளிட்ட பரிசுகள் நத்தம் பேரூராட்சி அறிவித்துள்ளது.

தடுப்பூசி சலுகைகள்
தடுப்பூசி சலுகைகள்

By

Published : Sep 10, 2021, 11:01 PM IST

திண்டுக்கல்:நத்தம் பேரூராட்சி மற்றும் நத்தம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் செப்டம்பர் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை கோயில்பட்டி கிழக்கு அங்கன்வாடி மையம், காந்திநகர் அங்கன்வாடி மையம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நத்தம், கொண்டையம்பட்டி பள்ளி, பாப்பாபட்டி அங்கன்வாடி மையம், நத்தம் பேருந்து நிலையம், மீனாட்சிபுரம் அங்கன்வாடி மையம், முஸ்லிம் தெரு அங்கன்வாடி மையம், நேருநகர் அங்கன்வாடி மையம், அசோக்நகர் அங்கன்வாடி மையம், அய்யாபட்டி அங்கன்வாடி மையம், மாரியம்மன் கோவில் தெரு அங்கன்வாடி மையம், காமராஜர் நகர் அங்கன்வாடி மையம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இதில் கரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும் பொதுமக்களுக்கு முதல் பரிசு ஆன்ட்ராய்டு கைபேசி, இரண்டாம் பரிசு மின்சார அடுப்பு, மூன்றாம் பரிசு சர்க்கரை பரிசோதனை கருவி மற்றும் 50 நபர்களுக்கு சிறப்பு பரிசுகள் என குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

இதுகுறித்து நத்தம் பேரூராட்சி செயல் அலுவலர் சரவணகுமார் கூறும்போது, நத்தம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கரோனா சிறப்புத் தடுப்பூசி முகாம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, குலுக்கல் முறையில் ஆண்ட்ராய்டு கைபேசி உள்ளிட்ட 53 பரிசுகள் வழங்கப்படுகிறது.

தடுப்பூசி சலுகைகள்

இதற்கான ஏற்பாடுகளை நத்தம் பேரூராட்சி, நத்தம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்துகிறது. இதில் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வமுள்ள நபர்கள் நேரில் ஆதார் அட்டை நகலுடன் அந்தந்த பகுதிகளில் நடைபெறும் முகாம்களுக்குச் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details