திண்டுக்கல்: பிரசித்திப்பெற்ற நத்தம் மாரியம்மன் கோயிலில் இன்று (செப்.7) நடந்த மகா கும்பாபிஷேகத்தில் அமைச்சர் சக்கரபாணி உட்பட 50 ஆயிரத்திற்கும் மேலான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். நத்தத்தில் பிரசித்திப்பெற்ற மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகத்தையொட்டி, அமைக்கப்பட்ட யாகசாலையில் கடந்த 4ஆம் தேதி முதல் இன்று 7ஆம் தேதி வரை பல கட்டமாக ஆறு கால யாக பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து நடந்த கோ பூஜை, மகா பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக, விமான கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, நாடாளுமன்ற உறுப்பினர் பா.வேலுச்சாமி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.