தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 22, 2021, 1:53 PM IST

ETV Bharat / state

முதியவரை கொன்றவருக்கு 10 ஆண்டு சிறை!

திண்டுக்கல்லில் கடை முன்பு தூங்கிய முதியவரை கொன்றவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

dindigul murder case  murder case  murder issue  murder  dindigul news  dindigul latest news  crime news  திண்டுக்கல் செய்திகள்  திண்டுக்கல் கொலை வழக்கு  முடிவுக்கு வந்த கொலை வழக்கு  கொலை  கொலை வழக்கு
கொலை

திண்டுக்கல்:வேதாத்திரிநகரை சேர்ந்தவர் கருப்பையா (65). இவருடைய நண்பர் கண்ணன், திண்டுக்கல் கிழக்கு ரதவீதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கடை வைத்து இருக்கிறார்.

இதனால் அந்த கடைக்கு கருப்பையா அடிக்கடி செல்வது வழக்கம். அந்த வகையில் கடந்த 2008 ஆம் ஆண்டு டிசம்பர் 30 அன்று இரவு கருப்பையா வழக்கம் போல் தனது நண்பரின் கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது கருப்பையாவை இரவு கடையில் படுத்து கொள்ளும்படி கண்ணன் கூறியுள்ளார். அதன்பேரில் இரவு கடையின் முன்பு கருப்பையா படுத்து உறங்கியுள்ளார். ஆனால் மறுநாள் காலையில் கருப்பையா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார்.

10 ஆண்டுகள் சிறை

இது குறித்து திண்டுக்கல் வடக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் திண்டுக்கல் மார்க்கெட் குமரன் தெருவை சேர்ந்த நாகராஜ் (40) என்பவர், கருப்பையாவை கொலை செய்தது தெரியவந்தது.

அதாவது, கண்ணனுக்கும் நாகராஜனுக்கு இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதனை தீர்த்துக்கொள்வதற்காக கண்ணனை கொல்வதற்காக நாகராஜன் சம்பவத்தன்று இரவு கண்ணனின் கடைக்கு சென்றுள்ளார். அப்போது கடை முன்பு தூங்கிய கருப்பையாவை, கண்ணன் என நினைத்து இரும்பு கம்பியால் நாகராஜ் தாக்கி உள்ளார். அதில் கருப்பையா சம்பவ இடத்திலேயே இறந்ததுள்ளார்.

இதையடுத்து நாகராஜை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி சரவணன் வழக்கை விசாரித்தார். இதில் காவல் அலுவலர்கள் உள்பட மொத்தம் 15 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன.

இதற்கிடையே வழக்கு விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று முன்தினம் (அக்டோபர் 20) இவ்வழக்கிற்கு நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட நாகராஜூக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: சசிகலா குறித்து கருத்து; எடப்பாடி பழனிசாமி உருவ பொம்மையை எரிக்க முயற்சி

ABOUT THE AUTHOR

...view details