தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அட்டகாசம் செய்யும் யானைகள்! அச்சத்தில் மலை கிராம மக்கள்! - Elephant Walking Dindigul

திண்டுக்கல்: மலைக் கிராமங்களில் யானைக‌ள் நடமாட்டம் இருப்பதால் பொதும‌க்க‌ள் இர‌வு நேர‌ங்க‌ளில் வெளியே வ‌ர‌ வேண்டாம் என‌ வ‌ன‌த்துறை சார்பில் எச்ச‌ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

dindigul

By

Published : Nov 13, 2019, 7:17 PM IST

திண்டுக்க‌ல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பல்வேறு கீழ் மலை கிராமங்களில் கடந்த சில நாட்களாக யானை நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக பாரதி அண்ணா நகர், பேத்துப்பாறை, அஞ்சு வீடு, கணேசபுரம் , புலியூர் உள்ளிட்ட கிராமங்களில் யானைக்கூட்டம் முகாமிட்டு விவசாய நிலங்களை சேதப்படுத்தியும், பொது மக்களை அச்சுறுத்தியும் வருகிறது.

இதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பு பெரியூர் கிராமத்தை சேர்ந்த ஆதிவாசி பெண் மாலையம்மாவை காட்டுயானை தாக்கியதில் உயிரிழந்தார். எனவே பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மலை கிராமங்களில் யானைகள் நடமாட்டம் மேற்கொள்ளும் காட்சி

மேலும், இப்பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் எனவும் வனத்துறை சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மனிதன் - யானை பிரச்னை: தீர்வைத் தேடும் சூழலியலாளர்!

ABOUT THE AUTHOR

...view details