மார்கழி மாத கடைசி நாளான நேற்று திண்டுக்கல் மாவட்டம் கோட்டை மாரியம்மன் கோயிலில் பெண்கள் திருவிளக்கு வழிபாடு நடத்தினர்.
இதில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் விளக்கு வழிபாட்டில் கலந்துகொண்டனர். விளக்கு வழிபாட்டின்மூலம் தங்களது வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம்.