திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சடையம்பட்டி மலையாண்டிசுவாமி கோயில் உள்ளது. நத்தம் சுற்றுவட்டாரத்தில் மலையாண்டிசுவாமி சண்டியர் காளையின் கம்பீரமும், வனப்பும் பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த காளையை 'சண்டியர்' என்றே செல்லமாக அழைப்பர்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன் காளையை விஷப்பாம்பு கடித்தது. தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று (ஏப்ரல் 19) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது. சுற்றுவட்டார கிராமமக்கள் ஒன்று கூடி வேஷ்டி, துண்டுகள், மாலைகள் அணிவித்து சந்தனம் பூசி காளைக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.