தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லாரி மீது பைக் மோதிய விபத்து - பதறவைக்கும் சிசிடிவி காட்சி - லாரி விபத்து சிசிடிவி காட்சி

திண்டுக்கல்லில் சாலையைக் கடக்க முயன்ற லாரியின் மீது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

சிசிடிவி காட்சிகள்
சிசிடிவி காட்சிகள்

By

Published : Apr 22, 2022, 6:20 AM IST

திண்டுக்கல்: வேடசந்தூர் தாலுகா புளியமரத்துகோட்டையைச் சேர்ந்தவர் இளைஞர் இளையராஜா. இவர், கரூரிலிருந்து திண்டுக்கல் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அதேசமயம் காக்காதோப்பு பிரிவு அருகே சாணார்பட்டியைச் சேர்ந்த அய்யனார் என்பவர் திண்டுக்கல் நோக்கி லாரியை ஓண்டிச் சென்றார்.

அப்போது காக்காதோப்பு பிரிவு அருகே லாரி தவறுதலாக சாலையைக் கடக்க முயன்றது. அப்போது இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இளையராஜா, லாரி மீது மோதி கீழே விழுந்தார். இதில், அவருக்கு வலிப்பு வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

சிசிடிவி காட்சிகள்

இதனைக் கண்ட அருகிலிருந்தவர்கள் இளைஞருக்கு கையில் இரும்பு கம்பியை கொடுத்தும், முதலுதவி செய்தும் அவசர ஊரதியில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:ரயிலில் 20 கிலோ கஞ்சா பறிமுதல் - ஒடிசா இளைஞர்கள் கைது!

ABOUT THE AUTHOR

...view details