தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் திருவிழா..!

திண்டுக்கல்: கோட்டை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் திருவிழா..! திண்டுக்கல் பூச்சொரிதல் திருவிழா..! பூச்சொரிதல் திருவிழா..! Dindigul Kottai Mariyamman Poosorithal Festival Dindigul Poosorithal Festival Poosorithal Festival
Dindigul Kottai Mariyamman Poosorithal Festival

By

Published : Feb 21, 2020, 8:42 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கோட்டை மாரியம்மன் கோயிலில் மாசி பெருந்திருவிழா ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த வருட திருவிழா இன்று தொடங்கியது. இத்திருவிழாவை முன்னிட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.

தேர் முழுவதும் வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு தேரில் விநாயகர், ஐயப்பன், முருகன், அமர்ந்திருக்க தேரின் நடுவில் பிரமாண்டமாய் கோட்டை மாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த பூத்தேர் கோயிலிலிருந்து புறப்பாடு நடைபெற்று கிழக்கு ரத வீதி, மேற்குரத வீதி, பழனி ரோடு, தெற்குரத வீதி என நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோயிலை வந்தடைந்தது.

பூச்சொரிதல் திருவிழா

தேர் வீதி உலா வரும்பொழுது சாலையில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனுக்கு பூக்களை காணிக்கையாக செலுத்தினர். பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பூக்களை கொண்டு கோயிலில் அம்மன் சிலைக்கு அலங்காரம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வருகின்ற 25ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்று 15 நாள் திருவிழா நடைபெற உள்ளது.

இதையும் படிங்க:'இந்தியன் 2' பட விபத்து: தலைமறைவாக இருந்த கிரேன் ஆபரேட்டர் கைது!

ABOUT THE AUTHOR

...view details