தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடைக்கானலில் பூத்து குலுங்கும் பைன் செட்டியா மலர்கள்! - பைன் செட்டியா மலர்கள்

திண்டுக்கல்:கொடைக்கானலில் இரண்டாவது சீசனை வரவேற்கும் விதமாக பைன் செட்டியா மலர்கள் பூத்து குலுங்கத் தொடங்கியுள்ளன.

flower
flower

By

Published : Sep 29, 2020, 11:59 AM IST

திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் முதல்கட்ட சீசன் ஏப்ரல் மாதம் தொடங்கி மே, ஜூன் மாதம் நிறைவடையும். இங்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவார்கள்.

கரோனா எதிரொலியின் கார‌ண‌மாக‌ சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ள் வ‌ருகைக்கு தடை விதிக்கப்ப‌ட்டிருந்த‌து, த‌ற்போது ப‌ல்வேறு த‌ள‌ர்வுக‌ள் அறிவிக்க‌ப்ப‌ட்ட‌ நிலையில் சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ள் மெல்ல‌ வ‌ர‌ தொட‌ங்கியுள்ள‌ன‌ர்.

பைன் செட்டியா மலர்கள்

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் இரண்டாவது சீசன் தொடங்கி டிசம்பர்வரை நீடிக்கம் தற்போது மூன்றாம் க‌ட்ட‌ த‌ளர்வுக‌ள் அளிக்க‌ப்ப‌ட்ட‌ நிலையில் வ‌ரும் அக்டோப‌ர் 1ஆம் தேதி முத‌ல் வ‌ன‌த்துறை க‌ட்டுப்பாட்டில் உள்ள‌ சுற்றுலா த‌ல‌ங்க‌ள் திற‌க்க‌ப்ப‌டும் என‌ வ‌ன‌த்துறை சார்பில் அறிவிக்க‌ப்ப‌ட்ட‌து.

படம் 2

தொட‌ர்ந்து கொடைக்கானலில் இரண்டாவது சீசனை வரவேற்கும் விதமாகவும் சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ளை க‌வ‌ரும் வித‌மாக‌ கொடைக்கானலில் அப்ச‌ர்வேட்ட‌ரி, செட்டியார் பூங்கா, ஏரிச்சாலை, செண்பகனூர், பிர‌காச‌புர‌ம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிவப்பு நிறத்தில் பைன் செட்டியா மலர்கள் பூத்துள்ளது. இது சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக உள்ளது. இந்த சிவப்பு நிற மலர்களை காண சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:பூ மார்க்கெட்டில் வாகனங்களுக்கு கட்டணம் - வியாபாரிகள் சாலை மறியல்!

ABOUT THE AUTHOR

...view details