தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜெய்ப்பூர் மருத்துவர் தற்கொலை - திண்டுக்கல்லில் மருத்துவமனைகள் முழு அடைப்பு - மருத்துவர் தற்கொலை

ஜெய்ப்பூரில் பெண்கள் நல மருத்துவர் மீது குற்றவியல் நடவடிக்கையைக் கண்டித்தும், தற்கொலைக்கு தூண்டியதைக் கண்டித்தும் திண்டுக்கல் மாவட்டத்தில் 250 தனியார் மருத்துவமனைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டன.

மருத்துவமனைகள் முழு அடைப்பு
மருத்துவமனைகள் முழு அடைப்பு

By

Published : Apr 2, 2022, 7:30 PM IST

திண்டுக்கல்: ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் அர்ச்சனா சர்மா என்ற பெண்கள் நல மருத்துவர் தனியார் மருத்துவமனை நடத்தி வந்தார். அவரது மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண், பிரசவத்தில் ரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்டதால் உயிரிழந்தார்.

இந்நிலையில் மருத்துவர் மீது அரசியல் தலையீடு காரணமாக, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ததாகத்தெரிகிறது. இதனால் மருத்துவர் அர்ச்சனா சர்மா தற்கொலை செய்து கொண்டார்.

மருத்துவர் மீது குற்றவியல் நடவடிக்கையை கண்டித்தும், தற்கொலைக்குத் தூண்டியதைக் கண்டித்தும் இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ சங்கத்தின் சார்பாக இன்று (ஏப்ரல் 2) ஒரு நாள் மருத்துவமனைகளை அடைத்துப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.

மருத்துவமனைகள் முழு அடைப்பு

அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 250 தனியார் மருத்துவமனைகள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை உள்நோயாளிகள் தவிர வேறு எந்த நோயாளிகளுக்கும் சிகிச்சை பார்க்காமல் முழுவதுமாக அடைக்கப்பட்டன.

மேலும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 550-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழந்த மருத்துவருக்கு மெளன அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிங்க:ஆம்பூர் காவல் நிலையம் அருகே இருசக்கர வாகனம் திருட்டு

ABOUT THE AUTHOR

...view details