திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பகுதிகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கன்னிவாடி காவல் துறையினருக்கு தகவல் வந்தது.
சட்டவிரோதமாக விற்கப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் - திண்டுக்கலில் குட்கா பொருட்கள் பறிமுதல்
திண்டுக்கல்: காவல் துறையினரின் அதிரடி சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ.50,000 மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
![சட்டவிரோதமாக விற்கப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4305170-thumbnail-3x2-kanni.jpg)
சட்டவிரோதமாக விற்கப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்
கன்னிவாடி காவல் துறையினர் அதிரடி சோதனை
அதன் பேரில் கன்னிவாடி காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான குழுவினர், கடைகளில் அதிரடி சோதனை நடத்தியபோது அரசால் தடை செய்யப்பட்ட ரூ.55,000 மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அதை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.
மேலும், கன்னிவாடி பகுதிகளில் தொடர்ந்து சோதனை நடத்தினால் இன்னும் அதிகமான பொருட்களை கைப்பற்றப்படலாம் என்று காவல்துறை, உணவுபாதுகாப்புத் துறை அலுவலர்களிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.