இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா வருகின்ற 22ஆம் தேதி காலை 7 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்கி, 27ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு மேல் திருக்கல்யாணமும், அன்று இரவு 9.30 மணிக்கு மேல் வெள்ளிரதமும் நடைபெறும். அதேபோல் 28ஆம் தேதி தைப்பூச திருவிழாவும், அன்று மாலை 4.30 மணிக்கு திருத்தேரோட்டமும் நடைபெறும். 31ஆம் தேதி தெப்பத்தேர் நிகழ்ச்சிக்கு பின் விழா முடிவடைகிறது.
65 வயதிற்கு மேற்பட்டவர்கள், நோய் உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், 10 வயதிற்கு குறைவான குழந்தைகள் ஆகியோர் கோயிலுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும். வரிசையில் நிற்கும்போது 6 அடி இடைவெளியினை கடைப்பிடிக்க வேண்டும். பக்தர்கள் பொது இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே திருக்கோயில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர். சோப்பை பயன்படுத்தி அடிக்கடி கைகளை சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். சுகாதாரமற்ற செயல்களை பக்தர்கள் முழுமையாக தவிர்க்க வேண்டும்.