தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயலாற்றி வருகிறது’ - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் - Dindigul District Administration Specially Function Comes

திண்டுக்கல்: கரோனா பாதுகாப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயலாற்றி வருகிறது என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

By

Published : May 23, 2020, 7:54 PM IST

திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்புள்ளதாக 133 நபர்களுக்கு பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் முதியவர் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், 106 நபர்கள் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது 24 நபர்களுக்கு திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையிலும், இரண்டு நபர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையிலும் என மொத்தம் 26 நபர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள், பணியாளர்களுக்கு திண்டுக்கல் லயன்ஸ் சங்கம் சார்பில் வழங்கப்பட்ட 10,300 முகக்கவசங்கள், முழுகவச உடை மற்றும் கரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களை மாவட்ட இணை இயக்குநரிடம் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினர்.

அப்போது பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் கரோனா இல்லாத மாவட்டமாக மாறுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தங்குதடையின்றி சிறப்பான முறையில் மேற்கொண்டு வருகிறது. இத்தகைய நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு தங்கள் முழு ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுக அரசு இந்தியாவிற்கே முன்மாதிரியாக திகழ்கிறது - ஆர்.பி. உதயகுமார் பெருமிதம்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details