தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆதரவின்றி தவித்தோருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கிய திண்டுக்கல் டிஐஜி - திண்டுக்கல் அண்மைச் செய்திகள்

திண்டுக்கல் : பழனி பேருந்து நிலையத்தில் உணவின்றி தவித்த ஆதரவற்ற 250 பேருக்கு திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி முத்துசாமி உணவுப் பொட்டலங்களை வழங்கினார். மேலும் முழு ஊரடங்கு நேரத்தில் தேவையின்றி வெளியே வாகனங்களில் வந்த நபர்களையும் எச்சரித்தார்.

பழனியில் ஆதரவற்ற 250 பேருக்கு திண்டுக்கல் டிஐஜி உணவு பொட்டலங்கள் வழங்கல்!
பழனியில் ஆதரவற்ற 250 பேருக்கு திண்டுக்கல் டிஐஜி உணவு பொட்டலங்கள் வழங்கல்!

By

Published : May 15, 2021, 8:09 PM IST

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வருகின்ற 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் மளிகை, காய்கறி, இறைச்சிக் கடைகள் மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிற வணிக நிறுவனங்கள் ஊரடங்கு நேரத்தில் இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஆதரவின்றி தவித்து வரும் பலர் உணவின்றி கடும் சிரமத்துக்குள்ளாகினர். இதனை அறிந்த திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி முத்துசாமி, தன்னார்வலர்கள் மூலம் சுமார் 250 சாப்பாடு பொட்டலங்களை ஏற்பாடு செய்தார்.

பின்னர் பழனி பேருந்து நிலையத்தில், ஆதரவற்ற 250 பேருக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினார். முழு மேலும், ஊரடங்கு நேரத்தில் தேவையின்றி இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை எச்சரித்தும் அனுப்பினார்.

இதையும் படிங்க : ஆக்சிஜன், ரெம்டெசிவிரை கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டம் பாயும்!

ABOUT THE AUTHOR

...view details