தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி! - Dindigul

Ankit Tiwari: லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 12, 2023, 1:49 PM IST

Updated : Dec 12, 2023, 2:08 PM IST

லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி நீதிமன்றத்தில் ஆஜர்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர் சுரேஷ்பாபுவிடம், ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியதாக மதுரையைச் சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

மேலும் அவரிடம் இருந்து லஞ்சப் பணம் 20 லட்சம் மற்றும் லஞ்சம் வாங்க பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து 15 மணி நேர விசாரணைக்குப் பின்பு, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி திருமதி மோகனா முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, வருகிற 15ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் விவேக் பாரதி மனுத் தாக்கல் செய்தார். இது தொடர்பான வழக்கு கடந்த டிசம்பர் 5 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.

இதனையடுத்து இன்று (டிச.12) அமலாக்கத்துறை அதிகாரியை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். பின்னர், நேரில் ஆஜர்படுத்தப்பட்ட அங்கித் திவாரியை விசாரித்த நீதிபதி மோகனா, லஞ்ச ஒழிப்பு போலீசார் 2 நாட்கள் காவலில் வைத்து விசாரணை செய்து, நாளை மறுநாள் (டிச14) மாலை 5 மணிக்கு நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370; சிறப்பு அந்தஸ்தின் தோற்றம் முதல் நீக்கம் வரையிலான முழு வரலாறு!

Last Updated : Dec 12, 2023, 2:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details