திண்டுக்கல்:கோபால் நகரைச் சேர்ந்தத் தம்பதி முருகன்- பூங்கோதை. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களது குடும்பம் கோபால் நகரிலுள்ள வினோத் கண்ணன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் மூன்று ஆண்டுகள் ஒத்திக்கு ரூபாய் 3 லட்சம் பணம் கொடுத்து வசித்துவருகின்றனர்.
ஒப்பந்த காலம் முடிவதற்கு ஓராண்டுக்கு முன்பாகவே இவர்களை வினோத்குமார் தனது வீட்டை காலி செய்யுமாறு வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. முருகன் தான் கொடுத்த ஒத்தி பணம் ரூபாய் மூன்று லட்சத்தை திருப்பிக் கொடுத்தால் காலி செய்வதாகக் கூறியுள்ளார்.
வினோத் கண்ணன் பணத்தை தர முடியாது என மிரட்டியுள்ளார். இது தொடர்பாக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் முருகன் புகார் அளித்து, இரண்டு முறை விசாரணையும் நடத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.