மத்திய அரசின் வாழ்க்கை குறியீட்டின் எளிமைத் திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள 114 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நகரத்தையும் உள்ளடக்கிய பொதுமக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர், கல்வி, போக்குவரத்து, காவல் துறை, மருத்துவப் பணிகள், பொது சுகாதாரம், பொருளாதாரம், அரசியல் போன்ற துறைகளில் 2018-19 ஆண்டின் புள்ளி விவரங்கள், தகவல்களின் அடிப்படையில், நகரங்களின் மதிப்பீட்டை அறிந்துகொள்வது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இத்திட்டத்திற்கு டெல்லியில் உள்ள ”கார்வி இன்சைட்ஸ்” என்ற நிறுவனத்தின் வழியாக அனைத்து மாநகரங்களுக்கும் ஆலோசகர் ஒருவர் நியமித்து, தகவல்கள் பெறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திண்டுக்கல் மாநகராட்சி இத்திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நம்மிடம் பேசிய திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் செந்தில் முருகன், மக்களின் தரம் குறித்து பொதுமக்களின் கருத்துகள் பெறப்பட உள்ளது. இதற்காக org/ Citizen feed back என்ற இணையதள முகவரியில் மக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.
செந்தில் முருகன், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் இதில் மாநகர மக்களின் கல்வித் தரம், மருத்துவம், போக்குவரத்து, வீடு, குடிநீர், சுகாதாரம், பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றதாக உள்ளதா? போன்ற கேள்விகள் கேட்கப்படும். பிப்ரவரி 29ஆம் தேதி வரை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இதுதொடர்பாக பேனர்கள், துண்டுபிரசுரங்கள் வாயிலாகத் தகவல் தெரிவிக்கப்பட உள்ளது என்று கூறினார்.
இதையும் படிங்க: காதல் திருமணம் செய்துகொண்ட மகள் மீது ஆசிட் வீச்சு; கர்ப்பிணி என்றும் பாராத கொடூரத் தந்தை