தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா எதிரொலி: ஒட்டன்சத்திரத்தில் சாலை எல்லைகளை மூடிய இளைஞர்கள் - ஐந்து நபர்களுக்கு கரோனா தொற்று

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் பகுதியில் ஐந்து நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, கிராம இளைஞர்கள் தங்கள் ஊர் எல்லைகளை மூடியுள்ளனர்.

dindigul-corona-virus-in-public-locked
dindigul-corona-virus-in-public-locked

By

Published : Apr 6, 2020, 4:56 PM IST

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் ஐந்து நபர்களுக்கு கரோனா தொற்று காரணமாக பல பகுதிகளில் கிராம இளைஞர்கள் தங்கள் ஊருக்குள் யாரும் வரவேண்டாம் என தடுப்பு அமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

டெல்லியில் நடைபெற்ற மதவழிபாட்டில் பங்கேற்ற திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த ஐவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

அதில், ஒட்டன்சத்திரத்தில் உள்ள சம்சுதீன் காலனியில் மூன்று பேரும், மாணிக்கம் பிள்ளை பேட்டையில் இரண்டு பேரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், ஒட்டன்சத்திரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கள் ஊருக்குள் வெளிநபர்கள் யாரும் வரக்கூடாது என சாலை எல்லைகளின் நுழைவு வாயிலை கடுப்புகள் அமைத்து மூடியுள்ளனர்.

அதேசமயம், அத்தியாவசிய பொருள்களை வாங்கிக்கொண்டு கிராமத்திற்குள் வரும் பொதுமக்கள் தங்களை சுத்தப்படுத்திக்கொள்ள நுழைவு வாயிலில் கிருமி நாசினி மருந்து, தண்ணீர், சோப்பு உள்ளிட்டவை இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவு - மகராஷ்டிராவில் இருந்து நடந்தே திருச்சி வந்த இளைஞர்கள்...!

ABOUT THE AUTHOR

...view details